பணம்
- RithuPedia
- Mar 22
- 1 min read

கதை 1
லெபனானின் பெரும் பணக்காரர்களில் ஒருவர் எமில் புஸ்தானி. பெய்ரூத்தில் தமக்காக ஓர் அழகிய கல்லறையை பார்த்துப் பார்த்துக் கட்டினார். சொந்தமாக ஒரு ஜெட் விமானம் வைத்துக் கொண்டு அதில் அவர் மட்டும் பயணம் செய்வார். அப்படி பயணம் செய்யும்போது ஒருநாள் அது கடலில் விழுந்தது. அவரது உடலைக் கண்டுபிடிக்க மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவு செய்யப்பட்டன. இறுதியில் விமானம் மட்டுமே கிடைத்தது.
அவர் கட்டி வைத்த கல்லறையில் அடக்கம் செய்ய கடைசி வரை அந்த உடல் கிடைக்கவே இல்லை.
கதை 2
பிரிட்டனைச் சார்ந்த பெரும் பணக்கார யூதர் ரூட் சைல்ட். அவரிடமிருந்த அபரிதமான செல்வச் செழிப்பால் சில சமயம் பிரிட்டன் அரசுக்கே கடன் கொடுப்பாராம். ரொக்கமாக இருக்கும் செல்வத்தை சேமித்து வைக்க பாதுகாப்பு அம்சங்களுடன் தனியாக ஓர் அறையைக் கட்டினார். ஒருமுறை அங்கு நுழைந்தவர் அறியாமல் கருவூலக் கதவை அடைத்துவிட்டார். அவ்வளவு தான்! கடைசி வரை கதவு திறக்கவே இல்லை. சப்தமிட்டார். கத்தினார். யாருக்கும் கேட்கவில்லை. காரணம், அவர் தங்குவது வீடல்ல. அரண்மனை. பெரும்பாலும் அரண்மனையிலிருந்து பலநாள் உல்லாசப் பயணம் சென்றுவிடுவார். அன்றும் அவ்வாறே சென்றிருப்பதாக குடும்பத்தார் நினைத்தனர். பசியாலும் தாகத்தாலும் கத்திக் கத்தி கூச்சலிட்டு பணக்கட்டுகளுக்கு மேல் கிடந்து மரணித்தார். மரணிக்கும்முன் விரலைக் காயப்படுத்தி சுவரில் எழுதினார் இப்படி: “உலகிலேயே பெரும் பணக்காரர் பசியாலும் தாகத்தாலும் இறக்கிறார்”. சில வாரங்களுக்குப் பின்னரே அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
* பணம் மட்டுமே தேவைகளை பூர்த்தி செய்கிறது என நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. ஒருநாள் உலகைப் பிரிந்தே ஆகவேண்டும். ஆயினும், எங்கே? எப்போது? எப்படி? என்பது மட்டும் புரியவே புரியாது புரியவும் முடியாது. உல்லாசப் பயணம் சென்றால் திரும்பலாம். உலகைப் பிரிந்தால் திரும்ப முடியுமா?
எனவே, யாரையும் வெறுக்காமல், யாரையும் ஒடுக்காமல், யாரையும் காயப்படுத்தாமல், யாரையும் கேவலப்படுத்தாமல், நாங்கள் மட்டுமே வசதியாக வாழ வேண்டும். எங்களிடம் மட்டுமே பணம், வசதி இருக்க வேண்டும் என நினைக்காமல் வாழ்வோம்!
வருமானம் அதிகரிக்க அதிகரிக்க நம் செல்வமும் அதிகரிக்கும். ஒன்றுக்கு 10 வீடுகள் வாங்கலாம். ஆனால் நாம் தூங்கவதற்கு 6 அடி கட்டில் போதும். அறுசுவை உணவை ஒவ்வொரு வேளையும் உண்ணலாம். ஆனால் மறுநாள் அதுவே மலமாகி விடும்.
உண்மையான மகிழ்வு பிறருக்கு அளிப்பதில் தான் உள்ளது. நல்ல நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கப் தேநீர் அருந்தும் போது கிடைக்கும் ஆனந்தம் நாம் மட்டும் தனியாக நம் வசதிக்கேற்ப ஸ்டார் ஹோட்டலில் சாப்பிடும் போது நிச்சயமாக கிடைக்காது.
Comments