“கைபேசியின் வரலாறு”
- RithuPedia
- Mar 15
- 1 min read

அது நேரத்தை சாப்பிட்டது,
அது நேரத்தை சாப்பிட்டது,
அது டார்ச் லைட்டை உட்கொண்டது,
அது தபால் அட்டைகளை மறக்கடைதத்து,
அது புத்தகங்களை முழுங்கியது,
அது வானொலியை விழுங்கியது,
அது வானொலியை விழுங்கியது,
அது வங்கி வைப்பு தொகையை வாங்கிக்கொண்டது,
அது போட்டோ கேமராவை அழித்தது,
அது கால்குலேட்டரை சாப்பிட்டது,
அது அண்டை வீட்டாருடன் நட்பை துண்டித்தது,
அது சொந்த பந்த உறவையும் மறக்கடித்தது,
அது நம் நினைவாற்றலை நுகர்ந்தது,
அது பிள்ளைகளின் விளையாட்டு பொருளானது,
தற்போது கைபேசி இல்லாத பிள்ளைகள் இல்லையே ! என மாறிவிட்டது, நமக்கு தெரியாத சில செல்போன் நுனுக்கங்கள் கூட நம் பிள்ளைகளுக்கு தெரிகிறது,
அதிகமானர் தியேட்டரில் படம் பார்ப்பதில்லை, Netflix / Amazon / Z5 / Ott / என… செல்போன் வழியில் சினிமா…
இவையேல்லாம் விஞ்ஞான வளர்ச்சி அதில் சந்தோஷம்தான். காலம் மாற மாற நாமும் மாறவேண்டும்தான் (இல்லையேன்றால் நம்மை பைத்தியகாரன் என்பார்களே) அதில் எந்த மாற்று கருத்துமில்லை.
இவற்றின் இன்னொரு பிம்பம் இருக்கிறதே ! அவற்றை நல்ல தாய் தகப்பனுக்கு பிறந்து ஒழுக்கமும் / நேர்மையுடனும் வாழவேண்டும் என நினைப்பவர்கள் இக்கால வாலிப வயதினருக்கு எவ்வாறு இவற்றின் பாதிப்புகளை சொல்லி புரிய வைப்பது?
“சிருசு முதல் பெருசு வரை செல்போன் இல்லாத ஆட்களே இல்லை” டீ கடை முதல் / செருப்பு கடை வரை செல்போன் வழியில் பணம் அனுப்பும் வசதி
ஒரு குடும்பத்தில் 5 பேர் என்றால், அந்த 5 செல்போனுக்கு மட்டும் மாதம் ரீச்சார்ஜ் 2000யிரம் ஆகிறது.
படித்தவர் முதல் படிக்காதவர் வரை கட்டை விரலில் உலகத்தை காணும்படி கொண்டுவந்துவிட்டான்.
தெருவில் குழந்தைகளின் விளையாட்டு இல்லை, வாய் மொழி பாடல்கள் இல்லை. இதுவே வங்கி, இதுவே ஹோட்டல், இதுவே மளிகைக் கடை, இதுவே மருந்துகடை, இதுவே மருத்துவர், இதுவே ஆசிரியர், இதுவே வரன் பார்க்கும் ஜோதிடர், இதுதான் உண்மையான வியாபார சந்தை.
முகம் பார்த்து பேசும் வாழ்கை மாறிவிட்டது. வாய் முடக்கப்பட்டுள்ளது. பக்கத்தில் யார் அமர்ந்திருக்கிறார், பக்கத்து வீட்டில் யார் குடி வந்திருக்கிறார், என்பதை கூட செல்போன் தெள்ள தெளிவாக காட்டுகிறது.
தற்போதைய காலகட்டத்தில் செல்போணை தொட்டால்தான் வாழ்க்கை.
Comentários