top of page

மனிதனை நேசிப்போம் பொருட்களை பயன்படுத்துவோம்



அப்பாவும் மகனும்!

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக் கொண்டிருந்தார்கள் . அப்பொழுது, சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து, காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது. கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசி விட்டார். அப்பொழுது தான் கவனித்தார், அவர் அடித்தது ஸ்பேனரை கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை, மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்கமுடியாது என்று மருத்துவர்கள் கைவிரித்தனர். மகன் வலி நிறைந்த கண்களுடன் அப்பாவை பார்த்து, “அப்பா என்னோட விரல்ளுங்க திரும்ப வளர்ந்துடும் இல்லப்பா?” என்று கேட்டவுடன், கண்ணீருடன் மவுனமாக வெளியே வந்தார். வெளியில் நின்றிருந்த காரை பல தடவைகள் எட்டி, எட்டி உதைத்தார். கண்ணீருடன் தலையில் கையை வைத்து கொண்டு காரின் முன்பு உக்கார்ந்து விட்டார். அப்பொழுது தான் அந்த கீரல்களை கவனித்தார் என்ன எழுதியிருக்கிறது என்று. அந்த வாசகம் “ஐ லவ் யூ அப்பா”. மனிதர்களை பயன்படுத்துகிறோம்! பொருட்களை நேசிக்கிறோம்!! எப்பொழுது தான் மனிதனை நேசித்து, பொருட்களை பயன்படுத்த போகின்றோமோ?


Comments


Tags

Quik Links

Subscribe 

Copyright © 2024 All Rights  Reserved - RithuPedia.

bottom of page